விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் அமலா பால்!!

நடிகர் விஜய்சேதுபதியின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பழனியில் ஆரம்பமாகியது.

‘VSP 33’ என்று பெயரிடப்பட்டுள்ள அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கும் இந்த படத்தில் நடிகை அமலா பால் கதாநாயகியாக நடிக்கின்றார்.

இவர் முதல்முறையாக விஜய்சேதுபதிக்கு ஜோடியாகின்ற இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கின்றார்.

சந்திரா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு இசை கலைஞராக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் ஏனைய நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘சிந்துபாத்’ படத்தின் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறார். இதனை தவிர ‘மாமனிதன்’, ‘சங்கத்தமிழன்’, ‘க.பெ.ரணசிங்கம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor