டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள நிலை!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி இந்த தகவலை தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று அறிக்கையில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.6549 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 179.9830 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொலருடன் ஒப்பிடும் போது, ரூபாயின் பெறுமதி இந்த வருடத்தில் நூற்றுக்கு 3.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.


Recommended For You

About the Author: Editor