கிழக்கு மாகாணமட்ட விருது வழங்கும் நிகழ்வு!

கிழக்கு மாகாணமட்ட விருது வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டெபா மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் நில்மினி.க.கேரத் தலைமையில்  (வியாழக்கிழமை) இந்நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த 2018ம் ஆண்டு இலங்கையில் அதிகூடிய அங்கத்தவர்களை இனைத்து கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு காணப்படுகின்றதுடன் இதுவரை 2018ம் ஆண்டு 18370 அங்கத்தவர்களை இனைத்து அகில இலங்கைரீதியில் 1ம் இடம் பெற்றமையை பாராட்டி மாகாண விருது வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில், முறைசாரா தொழிலில் ஈடுபடுகின்ற சமூகத்தினருக்கு சமூக பாதுகாப்பு காப்புறுதி மற்றும் ஓய்வூதிய திட்டத்தில் இனைந்து முதியோர்களை சமூகத்தில் ஒரு பாதுகாப்பானவர்களாக கவனிக்கும் பொறுப்பான சேவையினை வழங்கும் சமூகப்பாதுகாப்பு சபையின் உத்தியோகத்தர்களையும் இதனுடன் இனைத்து, செயலாற்றிய அனைத்து செயலக உத்தியோகத்தர்களையும் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெறுவதற்கு பாடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விருதுகளை பெற்றுக்கொள்வதற்காக திருகோணமலை உதவி மாவட்ட செயலாளர் என்.பிரதீபன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜேகதீஸ்வரன் பிரதேசசெயலாளர்கள் கணக்காளர்கள் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் கிராமசேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு விருதுகளையும் சான்றிதல்களை பெற்றுக் கொண்டனர்.


Recommended For You

About the Author: Editor