சென்னைக்கு 35 நிமிடத்தில் செல்லலாம்.!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் 28 ஆம் திகதி சென்னைக்கான பயணிகள் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேற்படி விமான நிலையம்  வியாழக்கிழமை வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்ட நிலையில், விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. விமானங்களின் பயணநேரம் 35 நிமிடமாகும்.

இந்நிலையில், கிழமைக்கு 7 பயணிகள் விமான சேவைகள் என்ற ரீதியில் தினமும் ஒரு சேவை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விமான சேவைகளில் இந்தியன் ஏயார் லைன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த அலையன்ஸ் விமானங்கள் ஈடுபடவுள்ளன.

இதேவேளை, உள்ளூர் விமான நிறுவனங்கள் இரண்டு பலாலிக்கும் சென்னைக்குமிடையில் விமான சேவையை மேற்கொள்வதற்கு போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இதனை அமைச்சரவையில் ஆராய்ந்து அச்சேவையை இணைத்த பின்னரே விமான சேவைக்கான கட்டணம் தீர்மானிக்கப்படுமென அமைச்சு தரப்பினர் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: Editor