ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே தொடரூந்து பாதை!!

ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே 54 ஆண்டுகளுக்குப் பிறகு 17 கிலோ மீட்டர் தொடரூந்து பாதை அமைக்க சுமார் ரூ.203 கோடி நிதியும், பாம்பனில் தொடரூந்து சேவைக்காக புதிய பாலம் அமைக்க ரூ.250 கோடி நிதியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த மாபெரும் நிகழ்வைக் கடந்த மார்ச், 1 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார். அதனையடுத்து, இன்று ரயில் சேவை துவங்குதற்காகத் தனுஷ்கோடியில் உள்ள 20 இடங்களில் மத்திய அரசு மண் பரிசோதனையைச் செய்து வருகிறது.

1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 நாட்கள் தனுஷ்கோடியில் புயல் பாதிப்பு ஏற்பட்டது. மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையைக் கடந்த போது ராட்சத அலைகள் வந்து தனுஷ்கோடியையே சீர்குலைத்தது. இந்த பேரழிவால் சுமார் 1800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தற்போது, அங்கு சில மீனவ மக்களே வசித்து வருகின்ற நிலையில் இப்போது மீண்டும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor