நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அமலாப்பால் !!!

தான் காதலிப்பதை ஒப்புக் கொண்டுள்ள நடிகை அமலாபால், தன்னுடைய காதலர் பற்றிய விபரஙகளை மட்டும் தெரிவிக்க மறுத்துள்ளார்.

ஆடையில்லாமல் அமலா பால் நடித்துள்ள ஆடை திரைப்படம் 19ம் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் அவர்.

ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரிடம் ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுப்பதில்லை என அமலா தெரிவித்திருந்தார்.

மீண்டும் காதல்

அமலா பால் மீண்டும் காதலில் விழுந்துள்ளது தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். தான் யாரை காதலிக்கிறேன் என அமலா பால் தெரியப்படுத்தாத நிலையில், அது யாராக இருக்கும் என பூதக்கண்ணாடி வைத்து தேடி வருகிறார்கள் ரசிகர்கள்.

பாண்டிச்சேரியில் குடியேற்றம்

இந்நிலையில் அமலா பால் தனது காதலருடன் பாண்டிச்சேரியில் குடியேறியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அதனை உறுதி செய்திருக்கிறார் அவர். ஆனால் தான் யாருடன் அங்கு வசிக்கிறேன் என்பதை மட்டும் சொல்ல மறுத்துவிட்டார்.

ஆவேச பதில்

பாண்டிச்சேரியில் தனியாகவா இருக்குறீர்கள்? அல்லது வேறு யாரும் உங்களுடன் இருக்கிறார்களா? என கேட்டதற்கு “நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும், வேறு யாருடன் இருந்தாலும், அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என அமலா பால் ஆவேசமாக பதில் அளித்தார்.

ஆதங்கமா? பப்ளிசிட்டியா?

அமலா பாலின் முன்னாள் கணவரான இயக்குனர் விஜய்க்கு சமீபத்தில் தான் 2வது திருமணம் நடந்தது. இந்த நிலையில் தானும் காதலில் இருப்பதை அமலா பால் வெளிப்படுத்தி இருக்கிறார். இது விஜய்க்கு திருமணம் நடந்துவிட்டதால் வெளிப்படுத்திய தகவலா இல்லை ஆடை பட புரொமோஷனுக்காக பரபரப்பை கிளப்ப இப்படி கூறியிருக்கிறாரா என்பது அமலா பாலுக்கே வெளிச்சம்.


Recommended For You

About the Author: Editor