வவுனியாவில் குழு தகராறு!! மூவர் படுகாயம்!!

வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு மோ தல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் கா யமடைந்த மூன்று இளைஞர்கள் சி கிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்தின் போது மூன்று மோட்டார்வண்டிகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், இரு வீடுகளின் யன்னல் க ண்ணாடிகள், வேலித்தகரம், வாயிற்கதவுகள் என்பனவும் உடைக்கப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய ச ந்தேகநபர்களை தேடும் நடவடிக்கையில் வவுனியா
கு ற்றத்தடுப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Recommended For You

About the Author: Editor