வெளிநாடு ஒன்றில் தமிழ் பெண் மாயம்!! உதவி கோரும் பொலிஸார்!!

சைப்பிரஸ் நாட்டில் இலங்கை பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுகிழமை Nicosia என்ற பணியிடத்தில் வைத்து குறித்த பெண் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

45 வயதான சமிலா சமந்தி என்ற பெண் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் 1.64 மீற்றர் உயரம் கொண்டவர் எனவும் அவருக்கு நீண்ட கறுப்பு முடி உள்ளதாகவும் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் போன பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor