சீனா தகவல்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வு செயற்கைகோளை ஏவியது!

புதிய தகவல்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வு செயற்கைகோளை சீனா வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

சிச்சுவான் மாகாணத்திலுள்ள ஜி-சாங் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்தில் இருந்து Long March-3B என்ற ரொக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

சீன நேரப்படி நேற்றிரவு 11.21 இற்கு இது விண்ணில் ஏவப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விண்ணில் ஏவப்பட்டு, அதற்குரிய சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள், அதிவேக தகவல்தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளது.


Recommended For You

About the Author: Editor