ஹற்றன்- நுவரெலியா பிரதான வீதியில் விபத்து!

ஹற்றன்- நுவரெலியா பிரதான வீதியிலுள்ள குடாஓயா பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த மூவரையும் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) மதியம், ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் பயணம் மேற்கொண்ட முச்சக்கரவண்டி, குடாஓயா பகுதியில் வைத்து, 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor