மருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு 37 வயது பெண் தனது மருமகனின் அண்ணனை திருமணம் செய்து கொண்டு இந்த திருமணத்திற்கு உறவினர்கள் மிரட்டல் விடுத்ததாகவும் இதனால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தனது 18 வயது மகளை அவர் காதலித்த வாலிபர் ஒருவருக்கே திருமணம் செய்து கொடுத்தார். இந்தத் திருமணம் நல்லபடியாக நடந்து தம்பதியினர் சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், மகள் கணவரது அண்ணனை அந்த 37 வயது பெண் காதலித்து உள்ளதாக தெரிகிறது.

இந்த காதல் முறையற்ற காதல் என்று தெரிந்தும் இருவரும் தீவிரமாக காதலித்ததோடு திருமணமும் செய்து கொண்டனர். இதுகுறித்து கேள்விப்பட்ட மகள் அதிர்ச்சி அடைந்து தனது உறவினர்களிடம் கூறியதை அடுத்து உறவினர்கள் அனைவரும் சேர்ந்து இருவரையும் மிரட்டி உள்ளனர்.

ஆனால் இந்த மிரட்டலுக்கு பயப்படாத அந்த பெண் தான் காதலித்தவருடன் தான் வாழ்வேன் என கூறி தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Recommended For You

About the Author: Editor