கட்டுநாயக்கா வந்த விமானம் மத்தலயில் தரையிறங்கியது!!

கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்த வெளிநாட்டு விமானம் ஒன்று அவசரமாக மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

மஸ்கட்டில் இருந்து இலங்கை வந்த, ஓமான் விமான சேவைக்கு சொந்தமான WY 371 என்ற பயணிகள் விமானமே இவ்வாறு மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய சூழலில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விமான மத்தல விமான நிலையம் நோக்கி அனுப்பப்பட்டுள்ளது.

இன்று காலை 8.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி இந்த விமானம் வந்துள்ளது.

இதன் போது பெய்த அடை மழை காரணமாக விமானம் மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பட்டுள்ளது.

மீண்டும் காலை 9.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி இந்த விமானம் பயணித்ததாக மத்தல விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor