விஸ்வாசத்தின் சாதனையை உடைத்த பிகில்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உச்ச நட்சத்திரங்கள் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் தென்னிந்தியாவிலேயே அதிகம் பேர் லைக்ஸ் செய்த ட்ரைலராக இருந்து வந்தது.

இதை பிகில் ட்ரைலர் 2 நாட்களில் முறியடித்தது மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக்ஸ் செய்த ட்ரைலராக சாதனை படைத்தது.

தற்போது 4 நாட்களில் விஸ்வாசம் ட்ரைலரின் ஹிட்ஸை பின்னுக்கு தள்ளி பிகில் சாதனை படைத்துள்ளது.

மேலும், மெர்சல் டீசர் தான் தமிழ் சினிமாவிலேயே அதிகம் பேர் பார்த்த டீசர்.

இதை பிகில் ட்ரைலர் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Recommended For You

About the Author: ஈழவன்