முல்லையில் பற்றி எரிந்தது பனங்கூடல்!!

முல்லைத்தீவு செல்வபுரத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

செல்வபுரம் பனங்கூடல் பகுதியில் தீடீரென ஏற்பட்ட தீ, கடும் வரட்சி காரணமாக வேகமாக பரவ ஆரம்பித்தது

இதன்காரணமாக பல பனை மரங்கள் முற்றாக கருகியிருந்ததோடு, இதனால் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களும் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் உடனடியாக பொலிசாரும், இராணுவத்தினரும் களத்தில் இறங்கி, தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor