கதுருவெல பகுதியில் பதற்ற நிலை!

சற்று முன்னர் பொலன்னறுவை கதுருவெல பகுதியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. தனியார் பேரூந்து சாரதி மற்றும் அரச பேரூந்து சாரதிகளிடையே இரவு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அது தொடர்பிலே இன்றைய தினம் அந்த பகுதியில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என தெரியவந்துள்ளது .

இதனால் குறித்த பகுதியில் மக்கள் கூடி தனியார் பேரூந்து சாரதிகளிற்கு எதிராக கோசம் இட முற்பட்ட வேளை அப் பகுதியில் பதற்ற நிலை தோன்றியுள்ளது.

முறுகல் நிலைக்கான காரணங்கள் இதுவரையில் வெளிவரவில்லை. குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவளைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor