பிரச்சினைகளை தள்ளிப் போட வேண்டாம் என்கிறார் டோனி!

பிரச்சினைகளை தள்ளிப் போடுவதைக் காட்டிலும் தீர்வு காண்பதே சிறந்தது என இந்தியக் கிரிக்கெட் மூத்த வீரரான மகேந்திர சிங் டோனி, தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியொன்றில், கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நான் மற்றவர்களை காட்டிலும் சிறந்தவனாகவே உள்ளேன்.

வெற்றி, தோல்வி போன்ற எந்த நிகழ்வுகளிலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில் அமைதியாக செயற்படும் டோனிக்கு ‘கேப்டன் கூல்’ என்ற பெயரும் உண்டு.

நான் சாதாரண மனிதனைப் போல் தான். சில நேரங்களில் எனக்கும் வெறுப்பு தோன்றும், கோபமும் வரும். ஆனால் எந்த உணர்ச்சியாலும் பாதிப்பு நிகழ்வதை தடுக்க வேண்டும்.

பிரச்சினைகளை தள்ளிப் போடுவதைக் காட்டிலும், தீர்வு காண்பதே சிறந்தது. இறுதி முடிவைக் காட்டிலும், அதற்கான வழிவகைகளை செய்வதே சிறந்தது.

டெஸ்ட் போட்டிகளில் 2 இன்னிங்ஸ் உள்ளதால், திட்டமிட்டு செயலாற்றலாம். ஆனால் ரி-20 போட்டிகளில் அனைத்து விரைவாக நடப்பதால், தேவைகளும் வேறாக உள்ளன. தனிநபர் திறமையைக் காட்டிலும், அணியின் நோக்கங்களே முக்கியமானவை. தென்னாப்பிரிக்காவில் கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘போல் அவுட்’ முறையை பின்பற்றினோம்.

போட்டிக்ககு முன்பு பயிற்சிக்கு சென்று ‘போல் அவுட்’ முறையை பின்பற்றி விளையாடுவோம். எவர் அதிகமாக விக்கெட்டை வீழ்த்துகிறார்களோ அவர்களை அதிகம் பயன்படுத்துவோம் என்பது இதில் ஒன்றாகும்.

அணி விளையாட்டில் அனைவருக்கும் பங்குண்டு. ரி-20 உலகக் கிண்ண தொடரில் ஒவ்வொருவரும் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து விளையாடியதால் சம்பியன் பட்டத்தை வென்றோம்’ என கூறினார்.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண தொடருக்குப் பிறகு இரு மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொண்ட டோனி, தற்போது இந்தியா இராணுவத்திற்காக சேவையாற்றி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய விடுமுறையை எதிர்வருட் நவம்பர் மாதம் வரை நீடித்துள்ளார். இதனால் விஜய் ஹசாரே கிண்ணம், பங்களாதேஷ் அணிக்கெதிரான ரி-20 தொடர் ஆகிய தொடர்களில் டோனி விளையாட மாட்டார் என தெரிகிறது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து மூன்று ரி-20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதனால் இந்தத் தொடரில்தான் அடுத்ததாக டோனி பங்கேற்பார் எனத் தெரிகிறது. இறுதியாக டோனி ஜூலை 10ஆம் திகதி நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண அரையிறுதிச் போட்டியில் விளையாடினார்.

தற்போது அவர் ஆறு மாத ஓய்வுக்குப் பிறகு மீண்டும் டிசம்பர் மாதம், இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.

38 வயதான மகேந்திர சிங் டோனி, எதிர்வரும் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண தொடருடன் ஓய்வுப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor