முகாமுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்! – ஒருவர் பலி, மூவர் காயம்..!!

Bondoufle நகரில் இரு தரப்புக்கிடையே இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார். மூவர் காயமடைந்துள்ளார்.

ஒக்டோபர் 16 ஆம் திகதி நேற்று புதன்கிழமை இரவு Bondoufle (Essonne) இல் உள்ள Roma camp முகாமில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெளியில் இருந்து ஏழு பேர் கொண்ட குழு ஒன்று கத்தி, இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முகாமுக்குள் நுழைந்துள்ளது.

பின்னர் அங்கிருந்த ஒரு சிலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலின் முடிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்து சேரும் முன்னர் தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


Recommended For You

About the Author: Editor