ஜநா பிரதிநிதி உண்மையை மறைத்தாரா?

போரின் பின்னர் எமக்கான தேவைகள் ஏராளம் இருந்தன.

அவற்றை அடையாளப்படுத்த வேண்டியிருந்தது.

இருட்டில் தேடமுற்படுபவர்களாக இல்லாது எமது தேவைகளைக்கண்டறிந்து, ஆராய்ந்து, அடையாளப்படுத்தி, அவற்றை எவ்வாறு தீர்த்துவைக்க முடியும் என்பது சம்பந்தமாகநான் 2013ல் பதவி ஏற்றதும் அப்போதைய ஐக்கியநாடுகள் வதிவிடப் பிரதிநிதி சுபினேநந்தி அவர்களுடன் பேசினேன்.

2003ல் தயாரித்ததுபோல் வடக்குமாகாணத்திற்கு ஒரு தேவைகள் மதிப்பீட்டைதயாரித்துத் தரும்படி வேண்டினேன். அப்போது இருந்தஅரசாங்கம் மகிந்த இராஜபக்சவுடையது.

ஐக்கியநாடுகள் நிறுவனம் போரின் முடிவில் பாதிக்கப்பட்டோருக்காக எதையுஞ் செய்யாது வாளாதிருந்தது என்றகுற்றச்சாட்டுக்கள் அப்போது இருந்தன.

அந்தக் குற்றச் சாட்டுக்களுக்குப்பொறுப்புக் கூற வேண்டிய நிலையில் சுபினேநந்தி இருந்தார். அவருக்கும் அப்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் மிகநெருக்கமான உறவு இருந்தமையாவரும் அறிந்ததே.

முழுமையானதேவைகள் மதிப்பீட்டைச் செய்வதாக ஒப்புக் கொண்டதன் பின்னர் மனித இன நலம் சம்பந்தமானவர் அறிக்கையை மட்டும் பெறவேஅவர் முன்னின்றார்.

முழுமையான அறிக்கைபெறப்பட்டால் சாட்சியில்லா யுத்தத்தின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளிவந்துவிடும் என்றபயம் அரசாங்கத்திற்கும் இருந்தது,அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணிவந்தசுபினேநந்தியிடமும் இருந்தது.

குறித்த அறிக்கையில் பலபிழையான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
உதாரணத்திற்கு கணவன்மார்களைப்போரில் இழந்த பெண்களின் தொகை வடமாகாணத்தில் சுமார் 49000 மாக இருந்தது.ஆனால் அவர்கள் அறிக்கைப்படிசுமார் 7500 பேரே போரில் கணவன்மார்களை இழந்தவர்கள்.
29000 பேரின் கணவன்மார்கள் இயற்கைமரணம் எய்தினார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 29000 பேர் அரசபடைகளால் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள் என்ற விபரத்தைவெளிக் கொண்டுவரவதிவிடப் பிரதிநிதி கூட பின் நின்றார்.
அரசாங்கம் மாறியபின்னர் இது சம்பந்தமாக பிரதம மந்திரியுடன் பேசினேன். தற்போது இது பற்றிபிரதமர் தலைமைத்துவத்தில் பாஸ்கரலிங்கம் அவர்கள் நடவடிக்கைகள் எடுத்துவருகின்றார்.
இதுகாறும் இவை சம்பந்தமாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றிநாம் அறிந்திருந்தால்த்தான் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். தரவுகள் சரியாக இருந்தால்த்தான் புள்ளிவிபரங்களைவழிநடத்திச் செல்லாம். பிழையானதகவல்களை அரசாங்கம் தந்துதவினால் எமது பிரச்சினைகள் சம்பந்தமாக உரிய நிவாரணங்களைப் பெறமுடியாதுபோய்விடும்.
ஆகவே உங்களின் சுயமதிப்பீட்டின் வழிமுறையானது இதுவரைஐ.நா. ஸ்தாபனத்தினாலும் அரசாங்கத்தினாலும் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றிப் போதிய அறிவுபெற இடமளிப்பதாக இருக்கவேண்டும்.
தற்போதைய ஐக்கியநாடுகள் வதிவிடப் பிரதிநிதியிடம் வடகிழக்கு தேவைகள் பற்றி இதுவரை தயார் செய்தசகல அறிக்கைகளினதும் பிரதிகள் பெறப்படவேண்டும்.

Recommended For You

About the Author: Editor