இணையத்தில் சிறுவர்களின் பாலியல் வீடியோக்கள் – 337 பேர் கைது

உலகின் பாரிய கருப்பு இணைய சந்தையைப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 337 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

37 நாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்ட 2 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களின் ஆபாசக் காணொளிகளை குறித்த கருப்பு இணையத்தளம் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இதுகுறித்த விசாரணைகளை முன்னெடுத்திருந்த இங்கிலாந்து பொலிஸார் குறித்த இணையத்தளத்தினை முடக்கியிருந்தனர்.

எனினும் குறித்த இணையத்தளம் தென்கொரியாவினைத் தளமாக இயங்கியது கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பிரித்தானியா, அயர்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா, ஜேர்மனி, ஸ்பெய்ன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், செக் குடியரசு மற்றும் கனடா உள்ளிட்ட 38 நாடுகளைச் சேர்ந்த 337 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த இணையத்தளத்தின் நிர்வாகியான 23 வயதுடைய Jong Woo Son உம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு எதிராக அமெரிக்காவில் ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்