மைத்திரிக்கு உயிர் அச்சுறுத்தல்!!

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியில் இருந்து ஓய்வு பெறும் போது அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று தீர்மானித்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகர்களை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அவருக்கு உயிர் அச்சுறுத்தல்கள் உள்ளமையினால் அவரது பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ வீடாக பயன்படுத்தப்படும் கொழும்பு, மஹகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள வீட்டை ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் அவருக்கே வழங்குவதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Recommended For You

About the Author: Editor