கூன் விழுந்த வடமராட்சிக் கிழக்கு!!

கடல்ப்புலிகளின் சிறப்புத்தளபதி சூசையின் வழி நடத்தலில் வடமராட்சி கரையோரக்கிராமங்களில் வாழும் மக்கள் விடுதலைப்போராட்டத்தின் முதுகெலும்பாக திகழ்ந்தார்கள் விகிதாச்சாரத்தில் அதிகளவான போராளிகள் கடற்புலிகளாகவும் கடற்கரும்புலிகளாகவும் வலம் வந்தார்கள்.

முதலாவது கப்பல் கப்டன் றஞ்சன் முதல் எத்தனையோ வீரமறவர்கள் வீரமறத்திகளின் சோரம் போகாத கோட்டையாக கோலோச்சி நின்றது வடமராட்சி கிழக்கு மண்!

தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் இயங்கு சக்தியாகவும் கவசமாகவும் ஒரு வரலாற்றை படைப்பதற்கு தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவமாகவும் இருந்து வந்தது.

இன்று கொடுக்குளாய் எனும் கிராமம் இனவழிப்பாளரின் தேர்தல் கூடாரமாக மாறியுள்ளது.
கடந்த தேர்தலில் மகிந்தாவுக்கு ஓட்டுப்போட்டவர்கள் வரப்போகும் சிறீலங்காவின் சனாதிபதித்தேர்தலில் களமிறங்கும் கோத்தாவுக்கு ஓட்டு போடுவதற்கு தயாராகியுள்ளார்கள்.

நோட்டு வாங்குவதற்கு மிகப்பெரும் வரலாற்றுத்துரோகம் இழைக்கும் இந்த செயலுக்கு உந்து சக்தியாக இருப்பவர்கள் உங்கள் உணவுக்கோப்பைகளை உற்றுப்பாருங்கள் உப்புப்போடப்பட்டுள்ளதாவென்று!

நேற்று ஒரு சிந்தனையும் இன்று ஒரு சிந்தனையுமாக மாறும் உங்களைப்போன்ற பச்சோந்திகளுக்காகவா பல்லாயிரக்கணக்கில் நெறிபுரளாத மாவீரர்களை மண்ணில் புதைத்தோம்!

நீங்கள் கண்ணியமானவர்கள் என்றுதானே கடற்கரும்புலிகளாக உடல்சிதறி உப்புக்காற்றில் கலந்தார்கள்
நீங்கள் மண்ணினை நேசிப்பீர்கள் என்றுதானே சாகும் திகதி நேரமறிந்தும் புன்னகை சிந்தியபடி
போகும் படகில் கையசைத்துப் போனார்கள் நீங்கள் முள்ளிவாய்காலில் பிணங்களை கடந்து வந்த வலிகளையும் வரிகள் தாங்கிய வீரர்களின் தியாகங்களையும் சற்றும் சிந்தித்துப்பார்க தோன்றவில்லையா?


Recommended For You

About the Author: Editor