பிலிப்பைன்ஸின் தீவுப் பகுதியில் நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியிலுள்ள மிண்டானோ தீவுப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று  இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

கொலம்பியா நகரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் 7.7 கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் உருவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையான அதிரவுக்கு உள்ளாகின. நில நடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.


Recommended For You

About the Author: Editor