சவுதி அரேபியாவில் கோர விபத்து!

சவுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

சவுதி அரேபியாவிற்கு புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டவர்கள் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹஜ்ரா வீதியில் மற்றுமொரு வாகனத்துடன் பேருந்து மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor