உலக மயக்கவியல் நாள் (World Anaesthesia Day)!!

உலக மயக்கவியல் நாள் (World Anaesthesia Day) ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஆம் நாள் நினைவுகூரப்படுகிறது.
1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள், ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன் என்பவர் மாசச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில் இதனைப் பரிசோதித்தார்.

வலியை அறியாமல் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை அளிக்க இந்தக்கண்டுபிடிப்பு மிகவும் உதவியது.
மருத்துவ வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.

எனவே இந்த நாள் உலக மயக்கவியல் நாளாக கொண்டாடப்படுகிறது.

சத்திர சிகிச்சைக்கு மயக்க மருந்து வேண்டும் என நினைக்கும் இந்த உலகத்திற்கு யுத்த பிரதேசத்தில் கொல்லப்படும் அப்பாவி மக்களின் வலிகள் உணர முடியவில்லை.

மயக்கவியல் நாளில் மயக்க மருந்து இன்றி போரின் வலிகளையும் காயங்களையும் சுமக்கும் மக்களை நினைத்து பார்ப்போம்!

பி. கு.: முள்ளிவாய்க்கால் நாட்களில் குண்டுகள் செல் தாக்குதல்களால் காயமுற்ற எம் மக்களின் உடலில் இருந்து கதற கதற எந்த ஒரு மயக்க மருந்தும் இன்றி துகள்கள் எடுக்கப்பட்ட வலி சுமந்த நாட்களை இந்த உலகம் பத்து ஆண்டுகளாகியும் நினைத்து பார்க்கவில்லை!

காரணம் இந்த உலகம் மயக்க மருந்து கொடுக்காமலே ஆழ் மயக்க நிலையில் இருக்கிறது மனிதத்தின் துடிப்பின்றி!


Recommended For You

About the Author: Editor