வெடிகுண்டு புரளி குறித்து பொலிஸ் தலைமையகம் விளக்கம்!

கொழும்பு – மட்டக்குளியில் இன்று(புதன்கிழமை) காலை ஏற்பட்டிருந்த திடீர் பதற்ற நிலை குறித்து பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.

நேற்றிரவு வாகனம் ஒன்று குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று காலை பாடசாலைக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோர் இதுகுறித்து அச்சமடைந்தனர். குறித்த வாகனத்தில் வெடி குண்டு நிரப்பப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவின.

இதன்காரணமாக இன்று காலை குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இந்தநிலையில் தேவாலயம் மற்றும் அதற்கு அருகில் அமைந்துள்ள பாடசாலைக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம், சந்தேகத்துக்குரிய வாகனம் அல்லவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இயந்திக் கோளாறு காரணமாகவே குறித்த வாகனம், உரிமையாளரால் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வாகனத்தின் உரிமையாளர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளதுடன், இதுகுறித்து விளக்கமளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor