பிரெக்ஸிற் ஒப்பந்தம் மிகவும் கடினம்!

பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை எட்டுவது மிகவும் கடினமாக இருக்கின்ற போதிலும் இந்தவாரப் பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்தமொன்று எட்டப்படுவதற்கான சாத்தியம் இன்னும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பிரெக்ஸிற் பேச்சுவார்த்தையாளர் மிஷேல் பார்னியர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் உகந்த ஒப்பந்தமொன்றை எட்டவேண்டியது மிக முக்கியம் எனவும் நல்ல நோக்கங்களை சட்ட உரையாக மாற்ற வேண்டிய நேரம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திங்களன்று கிட்டத்தட்ட 12 மணிநேர தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இன்று லக்ஸம்பேர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து பார்னியர் விவரிக்கவுள்ளார்.

வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கான முயற்சிகளில் இருதரப்புத் தலைவர்களும் முயற்சி செய்கின்றனர்.


Recommended For You

About the Author: Editor