சிறுவர்களை ஆபாசமாக காணொளி எடுத்த எழுவருக்கு நேர்ந்த கதி!

ஜேர்மனியில் சிறுவர்களை ஆபாசமாக காணொளி எடுத்து வெளியிட்ட சர்வதேசக் கும்பலுடன் தொடர்புடைய ஏழு இந்தியர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜேர்மனியின் லுபெக் நகரில் சாச்சே ட்ரெப்கே என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சிறுவர் தொடர்பான ஆபாசப் படங்கள் பகிரப்படும் 29 வட்ஸ் அப் குழுக்கள் (whatsapp Group) இருந்தமை கண்டறியப்பட்டது.

அதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 483 பேர் உறுப்பினராக இருந்தமையும் கண்டறியப்பட்டது.

அதில் 7 இந்தியர்களின் வட்ஸ் அப் எண்களும் இருப்பதாகக் கூறி கடந்த ஜனவரி மாதம் ஜேர்மனி தூதரகம் மூலம் இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

இதையடுத்து செப்டம்பர் மாத இறுதியில் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ. இந்தியாவைச் சேர்ந்த 7 பேர் மீது, குழந்தைகளை ஆபாசமாக காணொளி எடுத்துப் பகிர்ந்ததாக, தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor