பிரித்தானியாவில் வெறுப்புணர்வுக் குற்றங்களின் எண்ணிக்கை உயர்வு!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்ட வெறுப்புணர்வுக் குற்றங்களின் எண்ணிக்கையில் 10 சதவிகிதம் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, 2018 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை 103379 வெறுப்புணர்வுக் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

திருநங்கைகளுக்கு எதிரான வெறுப்புணர்வுக் குற்றங்கள் 37% அதிகரித்து 2333 ஆகவும் பாலியல் வேறுபாடுகளுக்கு எதிரான வெறுப்புணர்வுக் குற்றங்கள் 25% அதிகரித்து 14491 ஆக உயர்ந்துள்ளன. ,

இயலாமைக்கு எதிரான வெறுப்புணர்வுக் குற்றங்கள் 14% அதிகரித்து 8256 ஆகவும், மதத்திற்கு எதிரான வெறுப்புணர்வுக் குற்றங்கள் 3% அதிகரித்து 8566 ஆகவும் உயர்ந்துள்ளன.

இன வேறுபாட்டுக்கு எதிரான வெறுப்புணர்வுக் குற்றங்கள் முக்கால்வாசி குற்றங்களுக்கு (78,991) காரணமாக இருந்தன, முந்தைய ஆண்டில் இது 11% அதிகரித்துள்ளது.

மதத்துக்கு எதிரான வெறுப்புணர்வுக் குற்றங்களில் 47% (3530) முஸ்லிம்களுக்கு எதிராகவும் 18% (1326) யூத மக்களுக்கு எதிராகவும் நிகழ்த்தப்பட்டுள்ளன.

ஒருவரின் இனம், மதம், பாலியல் வேறுபாடு, இயலாமை மற்றும் திருநங்கைகளின் அடையாளம் ஆகியவற்றுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் குற்றங்கள் வெறுப்புணர்வுக் குற்றங்களாக கருதப்படுகின்றன.

வாய்மொழி துஷ்பிரயோகம், அச்சுறுத்தல், துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் கொடுமைப்படுத்துதல், அத்துடன் சொத்துச் சேதம் ஆகியவை வெறுப்புணர்வுக் குற்றங்களில் அடங்கும்.


Recommended For You

About the Author: Editor