தமிழ் தலைமைகளுடன் பேச பிரதமர் ரணில் யாழ் பயணம்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய இன்று (புதன்கிழமை) யாழிற்கு செல்லும் அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்தோடு இந்த விஜயத்தின்போது தமிழ் கட்சிகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை அறிவிக்கவில்வை.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைமைகளையும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர்களுடனும் நேரில் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த சந்திப்புக்களில் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவை கோரும் ரணில், தமது எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை யாழ். சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை திறந்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor