ஆட்சியைக் கைப்பற்ற மக்கள் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும்!

ஆட்சியைக் கைப்பற்ற மக்கள் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டின் ஆட்சியைக் கைப்பற்ற பிரேமதாஸவின் புதல்வனான எனக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று இவ்வேளையில் நான் கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் இந்த நாட்டை, நான் யாரும் நினைத்துப்பார்க்காத வகையில் முன்னேற்றிக் காண்பிப்பேன்.

எம்முடன் இன்று பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்துள்ளார்கள். எமது கொள்கைகளுக்கு இணங்கியே அவர்கள் இணைந்துள்ளார்கள்.

மாறாக, எம்மிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அல்ல. அவ்வாறு கொடுப்பதற்கும் எம்மிடம் பணமில்லை.

மிகவும் கஷ்டப்பட்டே தேர்தல் நடவடிக்கைகளைக்கூட இன்று நாம் மேற்கொண்டு வருகிறோம். நாம் கொள்கையடிக்கவில்லை. எமது கைகள் தூய்மையாகத்தான் இருக்கின்றன.

எனவே, எந்தவொரு பேதமும் பாராது எனக்கான ஒத்துழைப்பை மக்கள் வழங்க வேண்டும் என்று இவ்வேளையில் நான் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor