சீன இராசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து – நால்வர் உயிரிழப்பு

சீனாவில் தனியாருக்கு சொந்தமான இரசாயன தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமொன்றில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான குவாங்சி ஜூவாங்கில் உள்ள யூலின் நகரில் இயங்கிவரும் தனியார் இரசாயன தொழிற்சாலையொன்றிலேயே இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமான தொழிற்சாலையில் வெடிப்பு சப்தம் கேட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தொழிற்சாலையில் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி சிதறியோடினர்.

எனினும் சில தொழிலாளர்கள் வௌியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் 4 பேரை சடலமாகவே கண்டெடுக்க முடிந்ததாக மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

மேலும் 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்