தேர்தல் பிரச்சாரத்திற்கு பொலித்தீன் பயன்படுத்த தடை.

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொலித்தீன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

பிரசார நடவடிக்கையின்போது பொலித்தீன் பயன்பாடு இடம்பெற்றிருந்தால், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான சட்டத்திற்கு அமையவும், தேசிய சுற்றுச்சூழல் சட்டத்திற்கு அமையும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாதாகைகள், சுவரொட்டிகள், கையேடுகள், கொடிகள் என்பனவற்றை தேர்தல் சட்டத்திற்கு அமைய, 3 சந்தர்ப்பங்களில் மாத்திரமே பயன்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.

வேட்பாளரின் வாகனத்திலும், சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்ட காரியாலயங்கள் மற்றும் பொதுக்கூட்டம் இடம்பெறும் இடங்களில் மாத்திரமே அவற்றைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்