ஐ.எஸ். அச்சுறுத்தல் – தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்.

தமிழகத்தில் இரகசிய கண்காணிப்புப் பணியை புலனாய்வு அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரையில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்தியா முழுவதும் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, ஐ.எஸ் பயங்கரவாதிகள் தமிழகத்தில் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்