தபால் மூல வாக்களிப்பு – 78 ஆயிரத்து 403 விண்ணப்பங்கள் நிராகரிப்பு.

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 78 ஆயிரத்து 403 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தபால் மூலம் வாக்களிப்பதற்காக 6 இலட்சத்து 39 ஆயிரத்து 515 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சத்து 17 ஆயிரத்து 918 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தில் சேவையாற்றுவோர் எதிர்வரும் 31ஆம் திகதி மற்றும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகங்கள், தேர்தல் செயலகங்கள் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றுவோர் எதிர்வரும் 4ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்