ஈரான் இணையத்தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் ?

ஈரானின் உட்கட்டமைப்பு வசதிகளை இலக்குவைத்து அமெரிக்கா சைபர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

செப்டெம்பர் 14 திகதி சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்தே அமெரிக்கா சைபர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

செப்டெம்பர் இறுதியில் இந்த சைபர் தாக்குதல்கள் இடம்பெற்றன. ஈரானின் பிரச்சார திறனை பலவீனப்படுத்தும் விதத்தில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் பாதிப்பை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ள அதிகாரிகள் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர்.

இதேவேளை, பென்டகன் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. சைபர் தாக்குதல்கள், புலனாய்வுகள் மற்றும் திட்டமிடல்கள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானே காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது.

அமெரிக்கா சைபர் தாக்குதலை முன்னெடுத்துள்ளமை ட்ரம்ப நிர்வாகம் ஈரானிற்கு எதிராக பரந்துபட்ட மோதலை முன்னெடுக்க விரும்பாமல் மாற்று தந்திரோபாயங்களை பயன்படுத்த முனைவதையே புலப்படுத்தியது.

இதேவேளை, செப்டம்பரிற்கு பின்னர் வேறு சைபர் தாக்குதல்கள் இடம்பெற்றனவா என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

ஈரான் அமெரிக்காவின் சகாக்களிற்கு எதிராக சைபர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஈரான் சார்பு ஹக்கிங் குழுவொன்று ட்ரம்ப தொடர்பான ஆவணங்களை களவாடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்