ஐபோன் iOS 13.1.2 இல் சிக்கல்கள்.

ஐபோனின் iOS 13.1.2 இயக்க முறைமையின் புதிய பதிப்பில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் உள்ளதாக பயனாளர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

மேலும் புதிய iOS 13.1.2 இயக்க முறைமையைப் புதுப்பித்ததிலிருந்து உள்வரும் அழைப்புக்களில் சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அழைப்புகளைச் செய்ய இயலாமை, அதே நேரத்தில் பற்றரி வலு குறைதல் மற்றும் வெப்பமாகுதல் ஆகியவற்றால் தாம் ஏமாற்றமடைவதாக பயனாளர்கள் கூறுகின்றனர்.

இந்த விடயம் குறித்து அப்பிள் நிறுவனம் தெரிவிக்கையில்; எங்கள் பயனாளர்களின் பாதுகாப்பிற்காக இயக்க முறைமையைப் (iOS) புதுப்பிப்பது வழக்கமாகும். பயனாளர்களின் முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடைபெறும் வரை iOS 13.1.2 பற்றி தாம் கருத்துத் தெரிவிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

iOS பதிப்பு 13.1.1 இல் உள்ள பிழைகளை நிவர்த்தி செய்யவே iOS 13.1.2 புதிய பதிப்பு விரைவாக வெளியானது. எனினும் புதிய பதிப்பிலும் பல பிழைகள் உள்ளன.

iOS 13.1.2 புதிய பதிப்பில் உள்ள சிக்கல்கள் விரைவில் சரிசெய்யப்படுமா இல்லையா என்பது குறித்து அப்பிள் நிறுவனத்தினால் எதுவும் கூறப்படவில்லை.


Recommended For You

About the Author: ஈழவன்