திருகோணமலையில் வைத்து தேர்தல் விஞ்ஞாபனம்!

தமிழீழத் தலைநகர் திருகோணமலையில் வைத்து தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் அவர் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து ஒரு வாரத்துக்குள் விலகவேண்டும் என ரெலோ கட்சியினர் கேரியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். எனக்கு அவ்வாறான கோரிக்கை எதுவும் எழுத்து மூலம் கிடைக்கவில்லை.

தேர்தல் போட்டியிலிருந்து விலகமாட்டேன் என்பதை நேற்றுமுன்தினம் சங்கிலியன் பகுதியில் ஆரம்பித்த பிரச்சார நடவடிக்கைகள் ரெலோ கட்சியினருக்கு உணர்த்தியிருக்கும்.

எனது தேர்தல் விஞ்ஞாபனம் தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையில் மிகப் பிரமாண்டமாக நாளை மறுதினம் 17 ஆம் திகதி வெளியிட்டுவைக்கவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor