பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பேன்.

நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வுப் பிரிவால் வழங்கப்படும் அறிக்கைக்கு அமைய பயங்கரவாதி என நிரூபிக்கப்படுபவருக்கு இவ்வாறு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிட்டம்புவவில் இன்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்திலேயே தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக சிறந்த அக்கறை கொண்ட சமூகங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாட்டில் எந்தவொரு சமூகத்துக்கும் ஏனைய சமூகங்களைவிட முன்னுரிமை வழங்கப்படமாட்டாது.

நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ருவான்வெல்லவில் இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, “எனது அரசில் பாதுகாப்பு அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார்.

அவரது கடமைகளில் நான் தலையீடு செய்யமாட்டேன்.
புலனாய்வுத் துறைக்கு உரிய பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக வலுப்படுத்துதல், நவீன ரக ஆயுதங்களுடன் இராணுவத்தை மேம்படுத்துவதே எனது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்” என்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்