அரியாலையில் இளைஞன் அடித்துக்கொலை

குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், அரியாலை – மணியம் தோட்டம் பகுதியில் இந்தச் சம்பவம் இன்று (ஒக்.15) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மணியந்தோட்டம் 5ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த கொன்ஸ்ரன் கலஸ்ரன் (வயது-33) என்பவரே கொலை செய்யட்டுள்ளார்.
மணியந்தோட்டம் 3ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த உறவினரே (மச்சான்) கொலை செய்தார் என்று விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

“கொழும்புத்துறை பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் நீண்டகாலமாக மோதல் நிலை இருந்தது. இன்றும் வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியது.

அந்த நபர் கோடரியால் இளைஞரின் தலையில் அடித்துள்ளார்.
தலையில் பலமாக அடிபட்டதால், சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார்” என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிண அறையில் வைக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்