காருக்குள் மறைத்து வைக்கப்பட்ட பொருள்! அணில் செய்த காரியம்

அமெரிக்காவில் அணில் ஒன்று நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை காருக்குள் ஒளித்து வைத்திருந்த சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது.

பென்சில்வேனியா மகாணத்தில் உள்ள பீட்ஸ்பர்க் நகரில் ஒரு தம்பதியினர் தங்கள் காரை வீட்டின் பின்புறம் உள்ள வால்நட் மரத்தின் கீழ் நிறுத்தியிருந்தனர்.

சிலநாட்கள் கழித்து மனைவிக்கு போன் செய்த கணவர் காரை எடுத்துக் கொண்டு நூலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். சிறிது தூரம் ஓடிய கார் திடீரென நின்று போனது.

காருக்குள் விசித்திரமான சப்தம் கேட்பதையும், புகை வருவதையும் உணர்ந்த அந்த பெண், காரின் என்ஜின் பகுதியில் கூடுகட்டியிருந்த அணில் அதனுள் நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை மறைத்து வைத்திருந்ததைப் பார்த்தார்.

பின்னர் காரை பழுது நீக்கும் இடத்திற்கு இருவரும் கொண்டு சென்றனர். அங்கு காரை தலைகீழாக கவிழ்த்துப் பார்த்தபோது, மேலும் நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகள் இருப்பது தெரியவந்தது. இறுதியில் அந்தத் தம்பதி காரை நிறுத்த வேறு இடம் பார்த்துக் கொண்டனர்.


Recommended For You

About the Author: Editor