பிகில் திரைப்படத்திற்கு தடை கோரி மனுத்தாக்கல்.

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு தடை கோரி கே.பி.செல்வா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் உதவி இயக்குநர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை கோரியும் வழக்கு தொடர்த்துள்ளார்.

‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ உருவாகியுள்ளது.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தீபாவளிக்வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்