தடையை மீறி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ள எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன்!!

எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழுவினால் லண்டனில் காலநிலை மாற்றத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பட்டங்களுக்கு பொலிஸாரால் விதிக்கப்பட்ட தடையையும் மீறி ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் திங்கட்கிழமை முதல், லண்டன் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் சட்டபூர்வமாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி பொலிஸாரால் ரத்துச்செய்யப்பட்டதையடுத்து குறித்த இடத்திலிருந்து நேற்று இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றப்பட்டனர்.

பொலிஸாரின் உத்தரவை மீறி ஆர்ப்பாட்டங்களின் ஒன்பதாவது நாளான இன்று போக்குவரத்துத்துறையின் அமைச்சகத்தை இலக்குவைத்து எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்துத்துறை கட்டிடத்தின் நுழைவாயிலில் ஏறி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழுவின் இணை நிறுவனர் கெயில் பிராட்ப்ரூக், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor