முகேனுக்கு கிடைத்த ‘பிகில்’ திரைப்பட பரிசு!

நடந்து முடிந்த பிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மலேசிய பாடகர் முகேனுக்கு பிகில் திரைப்பட சிறப்பு பரிசு கிடைத்துள்ளது.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிக்பஸ் வெற்றி போட்டியாளர் முகேனுக்கு ‘பிகில்’ நடிகர் விஜயின் ஒளிப்படம் மற்றும் தளபதி வெறித்தனம் என பெயர் பதிக்கப்பட்ட டீ செர்ட் பரிசான அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒளிப்படங்களை முகேன் தனது ருவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் டிரெய்லர் கடந்த சனிக்கிழமை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துவருகின்றதுடன் இந்த டிரெய்லரை பாராட்டி திரையுலகில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor