பேப்பரில் ஒன்றை வைத்து சஜித்துக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தொடர்பில் இணக்கப்பாட்டு கோரிக்கை அறிக்கையில் முன்னணி கையெழுத்திடாது வெளியேறியமை பலராலும் கவலைக்குரியதாக நோக்கப்படுவது என்னவோ உண்மைதான்

என்றாலும், பிரதம வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் கட்சியின் 6 தீர்மானங்களில் ஒன்றாக தற்போது ஒற்றையாட்சி அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு வரைபை முன்கொண்டு செல்வது என உள்ள நிலையில்

இந்த கூட்டு உடன்பாட்டில் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டி தீர்வை முதல் கருத்தாக வைத்துக் கொண்டு மேற்சொன்ன உத்தேச வரை பை நிராகரிக்க வேண்டும் என்ற சரத்தை முன்னணி சேர்க்கக் கோரியதற்கு அப்படி செய்ய முடியாது என்று கூற 5 கட்சிகளும் முன்வைத்த காரணங்கள் போதுமானதாக இருந்திருக்கவில்லை

ஆனால் அதை சேர்க்க வேண்டும் என்பதற்கு முன்னணி வைத்த காரணம் சரியானதே.
ஆக மொத்தத்தில் மைத்திரிக்கு இதய இணைப்பு செய்த மாதிரி பேப்பரில் ஒன்றை வைத்து பேக்காட்டிக் கொண்டு நிஜத்தில் சஜித்துக்கு ஆதரவு நிலையினை எடுப்பதற்காக 5 கட்சிகளும் செய்த செயற்திட்டம் தான் இந்த அடம்பிடிப்பு என எண்ண தோன்றுகின்றது.
நிராகரிக்கவில்லை எனில் ஒன்றையாட்சியை நிராகரிக்கும் வகையில் அரசியலமைப்பு உத்தேச வரைபை மாற்றுவது என்றாவது குறிப்பிட்டு கஜேந்திரகுமாரை கையெழுத்திடப் பண்ணியிருக்கலாம்.
எது எப்படியோ மக்களின் முடிவு நிச்சயம் வித்தியாசமாகவே இருக்கும் என்பதே உண்மை.
ஒருவாறு இழந்து போன செல்வாக்கை கூடட்டமைப்பு இரண்டு கட்சிகளை இணைத்து முன்னனியின் முக்கியமான கருத்துக்களை கோரிக்கை ஆவணத்தில் உள்வாங்கி தன் இருப்பை சரி செய்வதில் வெற்றி கண்டுள்ளது.முன்னணி தன்னைத் தியாகம் செய்து இதற்கு உதவியிருக்கிறது என்றும் சொல்லலாம். அவர்களும் சாணக்கிய அரசியல் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்

Recommended For You

About the Author: Editor