பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!!

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

5.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

157 கிலோ மீற்றர் ஆழத்தில் நேற்று(திங்கட்கிழமை) குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, அண்மைக்காலமாக இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கம்
உணரப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor