மோதலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் கைது!

வவுனியா புளியங்குளம் பொலிஸாரினால் இளைஞர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புளியங்குளம் புரட்சி விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இளைஞர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக்கொண்ட நிலையில், போத்தல் ஒன்றினால் ஒருவர் தனது கையை தாக்கி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் காயமடைந்த நபரை புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஏனைய இளைஞர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொண்ட வைத்தியருக்கும் குறித்த இளைஞர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிநது.

இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து, வைத்தியசாலைக்குச் சென்ற பொலிஸார் அங்கு இளைஞர்கள் இருவரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதுடன், மேலும் இருவரையும் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.


Recommended For You

About the Author: Editor