அஸ்வின் முன்னேற்றம்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஏழாமிடத்துக்கு இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் இரவிச்சந்திரன் அஷ்வின் முன்னேறினார்.

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே 10ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை இரவிச்சந்திரன் அஷ்வின் அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

1 பற் கமின்ஸ், 2. ககிஸோ றபாடா, 3. ஜஸ்பிரிட் பும்ரா, 4. ஜேஸன் ஹோல்டர், 5. ஜேம்ஸ் அன்டர்சன், 6. ட்ரெண்ட் போல்ட், 7. இரவிச்சந்திரன் அஷ்வின், 8. வேர்ணன் பிலாந்தர், 9. நீல் வக்னர், 10. கேமார் றோச்.

இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 59 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்தியாவின் அஜின்கியா ரஹானே, துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

ஸ்டீவ் ஸ்மித், 2. விராட் கோலி, 3. கேன் வில்லியம்சன், 4. செட்டேஸ்வர் புஜாரா, 5. ஹென்றி நிக்கொல்ஸ், 6. ஜோ றூட், 7. டொம் லேதம், 8. திமுத் கருணாரத்ன, 9. அஜின்கியா ரஹானே, 10. குயின்டன் டி கொக்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

ஜேஸன் ஹோல்டர், 2. இரவீந்திர ஜடேஜா, 3. ஷகிப் அல் ஹஸன், 4. பென் ஸ்டோக்ஸ், 5. இரவிச்சந்திரன் அஷ்வின்.


Recommended For You

About the Author: ஈழவன்