
வரும் 30-ஆம் தேதியன்று தொடங்க உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க புறப்படும் முன்பு கேப்டன் விராட் கோலி மற்றும் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்தியாளர்களை சந்தித்தனர் .
அப்போது பேசிய விராட் கோலி , “இந்திய அணி தற்போது சமநிலையில் உள்ளது. வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடும் நிலையில் உள்ளனர். தற்போது அணியில் உள்ள எல்லா வீரர்களும் ஐபிலில் சிறப்பாக விளையாடியுள்ளனர் என கூறினார். இங்கிலாந்தில் தற்போது நல்ல வெப்ப நிலை உள்ளது. அதனால் நல்ல பிட்ச் இருக்கும் என நம்புகிறோம். அதிக ரன்கள் உள்ள போட்டிகள் நிறைய இருக்கும் என எதிர்பார்க்கிறோம் எனவும் கூறினார்.