கடலில் தொலைந்து போன மோடி

சீன அதிபர் ஜின்பிங்குடனான முறைசாரா உச்சி மாநாட்டு சந்திப்புக்காக பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார்.

அவர் கடந்த 12 ஆம் திகதி மாமல்லபுரம் கடற்கரையில், கடல் அலைகளில் கால்களை நனைத்தவாறே நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

அந்த தனது அனுபவங்களை பிரதமர் மோடி, இந்தி மொழியில் நேற்று கவிதை ஆக்கி உள்ளார்.

இதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதுபற்றிய முன்னுரையில்,“ நேற்று மாமல்லபுரத்தில் கடலில் நடந்து நான், கடலில் தொலைந்து போனேன். இந்த உரையாடல் என் ஆத்ம உலகம். இதை உங்களோடு வார்த்தைகளில் பகிர்ந்து கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

8 பத்திகளில் எழுதி, அவரால் கையெழுத்திடப்பட்ட இந்த கவிதையில், சூரியனுடனும், அலைகளுடனுமான கடலின் உறவையும், அதன் வலியையும் உணர்வுப்பூர்வமாக விவரித்துள்ளார்.

பிரதமர் மோடி ஏற்கனவே எழுதிய கவிதைகள் ‘ஒரு பயணம்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்