கொழும்பு துறைமுகத்தில் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் கடற்படை அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மேற்கு கடற்படை கட்டளை, கொழும்பு துறைமுக நுழைவாயிலில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, நீரில் மிதக்கும் சிதைந்த நிலையில் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலத்தை உடனடியாக கரைக்கு கொண்டு வந்த பின்னர்,மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்